மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்ல சுரங்கம் மற்றும் கனிவளத்துறை சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் மதுரையில் பல குவாரிகள் மற்றும் கிரஷர்கள் அனுமதியின்றி இயங்குவதால் லாரி ஓட்டுநர்களுக்கு அனுமதி சீட்டுகள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்துள்ள லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையை சுற்றி 11 சங்கங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.