பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அமைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயில் கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சிவன் சன்னதியை மறைத்து கோயில் நிர்வாகம் கடை அமைத்துள்ளனர்.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் இந்த செயல் கடும் கண்டனத்திற் குரியது என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்ய மறுக்கிறது என விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.