கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அதிமுக பிரமுகர் குடும்பத்தினரையும், அவரது வீட்டையும், திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அதிமுகவின் கிளைக் கழக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சங்கராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகரான காசி வேல், அதிமுக பிரமுகர் ஆறுமுகத்தின் மனைவி சின்னப்பொண்ணுயிடம் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பொதுவெளியில் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், காசிவேல் ஆதரவாளர்கள் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மீதும் அவர்களின் வீடு மீதும் கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்க சென்ற பொது மக்களையும் அவர்கள் கடுமையாக திட்டியுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைராகி வருகிறது.