ஆண்டிபட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற விசைத்தறி நெசவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள், கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
23ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறி, 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.