அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வேறு குழுவை நியமிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் பக்கெர்லா கல்யாண் தலைமையில் விசாரணை குழுவை மாற்றியமைத்து உத்தரவிட்டது.