தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு கடிதத்துடன் விஜய் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் விநியோகிக்கப்பட்டுள்ளது.