வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
உண்மையான குற்றவாளி யார் என தெரிந்தால் திருமாவளவன் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் ராஜா கூறினார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல “சார்கள்” சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும். பாலியல் வழக்கின் விசாரணையை திமுக அரசு திசைதிருப்ப முயல்வதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். ஈவே ராமசாமி குறித்த சீமானில் விமர்சனத்திற்கும் ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்தார்.