அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மாநகராட்சி குப்பை கிடங்கில் கிடந்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், 2021ல் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றபின் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் குப்பை தொட்டியில் கிடந்ததாக கூறினார்.