கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ராஜா என்பவர், பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வலது புறம் திரும்பிய பொழுது சாலையில் வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி அவர் மீது மோதாமல் இருக்க திடீரென வலது பக்கம் திரும்பியவுடன், பின்னால் வந்த வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.