தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உண்மை தன்மை அறிய மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரித்து பரிந்துரை செய்ய வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி எட்டுராஜ் என்பவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எட்டுராஜ் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து விவசாயி பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்தனர்.