நாமக்கல் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சுரேந்தர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவர் விடுதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவரின் குடும்பத்திற்கும் தகவல் கூறப்பட்டது.
இதனையறிந்து வந்த போது உடலை பார்க்க விடாமல் கல்லூரி நிர்வாகம் அழைக்கழித்ததாகவும், மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளனர்.