நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற தாய் இறந்ததுகூட தெரியாமல் அவரது உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை மருத்துவமனை பாதியிலேயே அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து மூதாட்டி காணாமல் போனதாக, மருத்துவ பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூதாட்டி வெளியே அழைத்து செல்லப்பட்டதை கூட ஊழியர்கள் கவனிக்காமல் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், மூதாட்டி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.