கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் அரசு அனுமதித்ததைவிட கூடுதல் மண் எடுத்துச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அரசு அனுமதித்த அளவைவிட, கூடுதல் வண்டல் மண் லாரிகளில் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கும் என்பதால், அப்பகுதி மக்கள், மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்து பாேராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண் அள்ள தடை விதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.