கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் மலர் நடவு செய்யும் முதற்கட்ட பணிகள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து தற்போது 2வது கட்டமாக மலர் நடவுசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த மலர் கண்காட்சிக்காக இதுவரை மொத்தம் 13 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.