ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற சீமானுக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், ஈரோடு கச்சேரி தெருவில் நாதக வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், சீமானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.