இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
யோஷித ராஜபக்ச மீதான சொத்துக்குவிப்பு புகாரை அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்ச பெலியட்டா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.