தமிழகத்தில் பட்டியலின சமூக பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் உரை வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் சாதிய பாகுபாட்டை தட்டிக் கேட்கும் நபர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பட்டியல் சமூக பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி நிலையங்களை சுற்றி நிலவும் போதை பொருள் அச்சுறுத்தல் தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பெருகிவரும் போதை பொருள் அபாயம் நமது எதிர்கால சந்ததிகளை அழித்துவிடும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதலீட்டாளர்களால் விரும்பப்படும் மாநிலமாக தமிழகம் இருந்தது என தெரிவித்துள்ள ஆளுநர், தமிழகத்தை தற்போது பின்னுக்கு தள்ளி முதலீடுகளில் தெலங்கானா, ஹரியானா முன்னேறி வருகின்றன எனவும் கூறியுள்ளார்.