பூந்தமல்லி அருகே 8 வயது சிறுமியை ராட்வைலர் நாய் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் நபர் ஒருவர் தான் வளர்க்கும் ராட்வைலர் நாயை வெளியில் விட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த வழியாக சென்ற சிறுமியை ராட்வைலர் நாய் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.