சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக அதிகார போர் நடந்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு துணை ராணுவப்படை அல்லது அதனை சார்ந்த கிளர்ச்சி படையே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு உலக சுகாதார நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகளை வழங்கும் மருத்துவமனையை தாக்குவது போர் குற்றமாகும் என உலக நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.