நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்களைக் குற்றவாளிகள்போல நடத்தியதாக அமெரிக்கா மீது அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் நாடு கடத்தப்பட்டனர். இவர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அவர்களை கைவிலங்கிட்டு, உணவு, தண்ணீரின்றி குற்றவாளிகள் போல நடத்தியதாக பிரேசில் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரேசில் மக்களை கழிப்பறைக்குக்கூட செல்ல அனுமதிக்கவில்லை என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பிரேசில் அரசு குற்றம் சாட்டியுள்ளது.