பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தினத்தை ஒட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தேசிய கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பிற நாடுகளில் மக்களிடையே உள்ள வேற்றுமை காரணமாகவே மோதல்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
நம் நாட்டில் பன்முகத்தன்மை வாழ்வின் ஓர் அங்கமாக பார்க்கப்படுகிறது எனக்கூறிய மோகன் பகவத், மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது முக்கியம் எனவும் தெரிவித்தார்.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறிய மோகன் பகவத், சிந்தனையின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணியும் பலன் தராது என தெரிவித்தார்.