காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எள்ளேரி வழியாக சென்றபோது எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக எள்ளேரி – சர்வராஜன் பேட்டை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.