நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சியில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினார்.
குடியரசு தினத்தை ஒட்டி மானூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். இதையடுத்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர் மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.