பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், மருத்துவர்களை கூடுதலாக நியமித்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.