இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக, கமுதி போலீசார் பதிவு செய்த வழக்கை, ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி நவாஸ் கனி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.