SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல “SIR”கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை திரு.வி.க. நகரில் 3 சிறுமிகளை 3 பேர் காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
SIR போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற நினைப்பதால் தான், தமிழ்நாட்டில் பல SIRகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டங்களை கடுமையாக்குவதாக சொல்லாமல், அவற்றை செயல்பாட்டில் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.