சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை வழக்கின் எதிரொலியாக 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கனிமவள கொள்ளைக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி, கடந்த 17-ம் தேதி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த 13-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகபர் அலி அளித்த புகாரில், திருமயம் வட்டாட்சியர் புவியரசன் மூலமாக குவாரி உரிமையாளர்களுக்கு பல தகவல்கள் கசிவதாகவும், அதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது திருமயம் வட்டாட்சியர் புவியரசன் உட்பட 4 வட்டாட்சியர்களையும், 6 வருவாய் ஆய்வாளர்களையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.