வேங்கைவயல் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு இன்றுக்குள் பதிலளிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்க கூடாது எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியல் சமூகத்தினராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்றைக்குள் பதிலளிளிக்க சிபிசிஐடி-க்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டது.
மேலும், 2 மனுக்கள் மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதால் சட்டப்படி மூன்று பேரும் குற்றவாளிகள் இல்லை என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என கூறினார்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்ல முயன்ற விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேங்கைவயலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டில் சமூதாய மக்களை சந்திக்க விசிகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களை சோதனை சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.