பிரபல ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
ZOHO CORP நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் வேம்பு, தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
புதிய தலைமை செயல் அதிகாரியாக ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனரான சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது புதிய பணியை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.