அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில்,ட்ரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார்.இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நண்பர் ட்ரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மக்களின் வளம், பாதுகாப்பு, உலக அமைதிக்காக இணைந்து செயல்படுவது தொடர்பாக உரையாடியதாகவும், 2-வது முறையாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்ற ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















