ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இருவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள உடைமாற்றும் அறைக்கு டிசம்பர் 24ஆம் தேதி பெண் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்படவே, ஏதேனும் கேமரா உள்ளதா என சோதனை செய்துள்ளார்.
டைல்ஸ் கற்களுக்கு பின்புறம் ரகசிய கேமரா இருந்தது தெரிய வரவே, இது குறித்து போலீசில் அவர் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடை மாற்றும் அறையில் இருந்து 3 கேமராக்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் என்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.