தமிழக பாஜக மாவட்ட தலைவர்களின் 3-ம் கட்ட பட்டியலில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ராமாநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த தரணி முருகேசன் மாற்றப்பட்டு புதிய தலைவராக முரளிதரன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவரான அஸ்வின் குமார் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சியினர் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக ஜி.குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவராக அறிவித்த உடன் அவரை கட்சியினர் தோளில் சுமந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை 2026 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றுவதே தனது லட்சியம் என்று தெரிவித்தார்.
இதேபோல் மதுரை நகர், ராமநாதபுரம், விழுப்புரம் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவண்ணாமலை தெற்கு, தென்சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.