அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிகயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அய்யப்பன்நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், தனது நிலத்தை அளவை செய்ய கிராம நிர்வாக அலுவலர் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விஏஓ புகழேந்தியிடம் வேல்முருகன் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.