கனடாவின் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வரும் மார்ச் மாதம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் தேர்தல் செயல்பாட்டில் இந்தியா தலையிடுவதாக கனடா தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
















