சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!
Sep 26, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 06:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட பின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை எனக்கூறி அவரது மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை முறையாக தடயங்களை சேகரிக்க தவறியதால் ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜகபர் அலியின் உடலை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.

இதனிடையேபுதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துளையானூரில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கனிவளத்துறை உதவி இயக்குனர் லலிதாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கனிமவளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags: PudukkottaiMadurai branch of the High Courtpermission to exhume the body of Jagbar AliJagbar Ali murder case
ShareTweetSendShare
Previous Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

Next Post

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் – கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

Related News

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies