டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக துவாரகா பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது டெல்லிக்கு தற்போது இரட்டை என்ஜின் ஆட்சி தேவை எனக்கூறிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தால் டெல்லியின் வளர்ச்சி பின்தங்கி மோசமாகிவிடும் என தெரிவித்தார்.
டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக விமர்சித்த பிரதமர் மோடி, டெல்லியில் பணியாற்ற பாஜகவிற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.