திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக காவல்துறை திமுக அரசின் கைப்பாவையாக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் தற்போது சாதாரண மக்களுக்கு ஒரு காவல் மாநிலமாகவும், குற்றவாளிகளுக்கு ஒரு புகலிடமாகவும் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
ஜாமினில் வெளிவந்த சட்டவிரோத வங்கதேச நாட்டினர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நிலையில், 75 பேரும் காணாமல்போனது எப்படி என்றும், திமுக அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநில காவல்துறை இதை எவ்வாறு அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சட்டவிரோத வங்கதேச நாட்டினர் இந்தியாவிற்குள் நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பது திமுக அரசுக்குத் தெரியாதா என வினவியுள்ள அண்ணாமலை, காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான திமுக அரசின் திட்டம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.