ரயிலில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போதைப் பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து எர்ணாகுளத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முன்பதிவு செய்யாத பெட்டியில் இருந்த ட்ராலி பேக் ஒன்றில் 17 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனர். பெட்டியில் பயணித்த பயணிகளின் மொபைல் எண்களை வைத்து விசாரணை நடத்தபட்டு வருகிறது.