FLIPKART மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2009ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு வரை, 10 ஆயிரத்து 601 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீட்டை பெற்றது தொடர்பாக, பிளிப்கார்ட், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நோட்டீசுக்கு பதிலளிக்காமல் நீதிமன்றத்தை அணுகி இருக்கக்கூடாது என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தது. மேலும், அமலாக்கத்துறை நோட்டீசுக்கு 30 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.