தமிழக வெற்றி கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் கொடி ஏற்றிவைத்து, கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்துவைத்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தவெக தலைவர் விஜய், கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைத்து, விஜய் மரியாதை செலுத்தினார்.