நடுத்தர வர்க்கத்தினரை மதிப்பதுடன், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அங்கீகாரம் அளிப்பது பாஜக மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில், டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியில் மக்கள் 12 லட்சம் சம்பாதித்த போது, நான்கில் ஒரு பங்கு வரியாக பிடித்தம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதேபோல் இந்திராகாந்தி ஆட்சியில், ஒவ்வொரு 12 லட்சத்தில் 10 லட்சம் வரியாக பிடிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். ஆனால் பாஜக ஆட்சியில், பட்ஜெட்டுக்கு பிறகு, ஆண்டுக்கு 12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டால் நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.