வங்கதேசத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில், உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் தொடர்ந்து உள்ளது. அதன் தலைநகரான டாக்கா தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக உள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த காற்று காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,.