காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் செம்பரா மீன்கள் சிக்கின.
கோட்டுச்சேரி மற்றும் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகில் கடலுக்கு சென்றனர். இவர்களது வலையில் அதிகளவு செம்பரா மீன்கள் சிக்கிய நிலையில், துறைமுகத்தில் மீன் பிரியர்கள் அவற்றை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
இதேபோல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செம்பரா மீன்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.