சிவகங்கை அருகே 35 லட்சம் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். 6 பேரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 35 லட்சம் மதிப்பிலான, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான முகமது அசாருதீனை போலீசார் தேடி வருகின்றனர்.