சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர்,
ஏடிஜிபி அலுவலகம் தீக்கிரையாவதும், காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கை காப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சிறப்பாக நடத்தி வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக விமர்சித்துள்ள இபிஎஸ், காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பில்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
மேலும் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.