நாமக்கல் அருகே நிலத்தடி தொட்டி தண்ணீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போதுபட்டி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் – இந்துமதி தம்பதியருக்கு, 3 வயதில் யாத்விக் ஆரியன் மற்றும் 11 மாத குழந்தை நிவின் ஆதிக் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகன் யாத்விக் ஆரியன், நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இந்துமதி, தனது கை குழந்தையுடன் தொட்டியில் குதித்துள்ளார். இதனால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வீட்டிற்கு வந்த ரவிக்குமார், மனைவி, குழந்தைகள் காணாததால், திறந்து கிடந்த தொட்டிக்குள் பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.