ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் அரண்மனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா, கடந்த ஒன்றாம் தேதி முதல் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், கோயிலின் தங்க கும்பத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி, ராணி அபர்ணா தேவி, ராணி அஸ்மிதா, ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அரண்மனையை சேர்ந்த சொந்த பந்தங்களும், ஆன்மீகப் பெரியோர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.