கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சட்ட விரோத கனிமள கொள்ளை மற்றும் கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கொலை வழக்கில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, மற்றும் ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 5 பேரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.