ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.