நீலகிரி மாவட்டம் சக்கத்தா மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா மலைப்பாதையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. காரில் இருந்து புகை வந்ததால், காரில் பயணித்த இருவரும் கீழே இறங்கி உயிர் தப்பினர்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.